FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்திய ஸ்பெயின்!
உலக சர்வதேச விளையாட்டு திருவிழாவில் ஒன்றாக இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இந்த போட்டியானது கடந்த 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இந்த போட்டியானது நடைபெற்றது.
தற்போது இந்த ஆண்டு இந்த போட்டியானது கத்தாரில் நடைபெறுகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதி கொண்டது.அர்ஜென்டினா அணியை சவூதி அரேபியா வென்றது.அதனால் நேற்று ஒருநாள் விடுமுறை அறிவித்து வெற்றியை கொண்டாடும் விதமாக அமைய வேண்டும் என சவூதி மன்னர் அறிவித்தார்.
மேலும் நேற்று எப் பிரிவில் நடந்த முதல் போட்டியில் மொரோக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதி கொண்டது.அந்த போட்டியானது 0-0 என்ற கணக்கில் டிரா ஆனது.
அதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.பிறகு 2 வது சுற்று நடைபெற்றது. அதில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் மோதியது.அதில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது. 3 வது சுற்று ஸ்பெயின் மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் மோதியது.
அந்த போட்டியில் ஆரம்பம் முதலிலேயே ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்பெயின் அணியின் முன்கள வீரர்கள் கோல் அடித்து குவித்தார்.முதல் பாதியில் டானி ஓல்மோ ,மார்கோ ,அசென்சியோ ,பெரான் டோரஸ் ஆகியோரின் கோலால் ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் முன்னணி வகித்தது.
மேலும் 2 வது பாதியில் ரிக்கா அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை ஆனால் ஸ்பெயின் அணி வீரர்கள் தொடர்ந்து கோல் அடித்தனர்.இறுதியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்கா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.