மெரினாவில் போராட்டமா? பீதியில் காவல்துறையினர்!

0
115

இணையதளம் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக சென்னை உட்பட ஒரு சில பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த மாணவர்கள் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, மெரினா கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை வைக்கப்பட்டு இருக்கிறது. மெரினா சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் பெரிய அளவில் கூட்டமாக ஒன்று சேரவும், காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்று சொல்லப்படுகின்றது ஆனால் காவல் துறையின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கும்போது மாணவர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வருவதாகவும், இதனால் மெரினாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்பில்லை எனவும், சமூக வலைதளங்களில் தகவல் தரப்படுவதால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது எனவும், தெரிவித்து இருக்கிறார்கள். நேற்றைய தினம் மாணவர்கள் பெரிய அளவில் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற எந்த ஒரு போராட்டமும் மெரினாவில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சட்டவிரோத நகை கடத்தல் கும்பல்!
Next articleதமிழகத்தில் மத பயங்கரவாதிகள் பதுங்கல்! தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நபர்!