இயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கு வந்த பட வாய்ப்புகள்!! அதனை தட்டி பறித்த நடிகர்!!

0
99
Film opportunities for director Vikram Sukumaran!! The actor who stole it!!
Film opportunities for director Vikram Sukumaran!! The actor who stole it!!

“மதயானை கூட்டம்” படத்தினை இயக்கியவர் தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இவர் இப்படத்தினை தொடர்ந்து இராவணக் கோட்டம், ஆடுகளம் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்பொழுது, தன்னுடைய facebook பக்கத்தில் நடிகர் ஒருவரை வன்மையாக கண்டித்து பதிவு ஒன்றே போட்டுள்ளார். இது திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது :-

மதயானை கூட்டம் படத்தினை இயக்கிய பின்பு எனக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. எனக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தையும் ஒருவன் தடுத்துள்ளான் என்றும் அவனை தான் நடிகனாக அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்தியை கேட்டதிலிருந்து எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் ஆண்டவன் மீது தான் முழு பாரத்தையும் போட்டு விட்டேன் என்றும் யார் மீதும் ஆத்திரப்படுவதால் ஒன்றும் ஆகவில்லை என்றும் தன் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இவருடைய பதிவு சினிமா துறையில் அனைவரிடமும் சலசலப்பு ஏற்படுத்தியதுடன் யார் என்று கேள்வியும் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous article48 நாட்களில் கர்ப்பப்பை அடைப்பு நீங்க இயற்கை வைத்தியமுறை!
Next articleஜிப்மர் ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.33,000/- பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!