மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு, இதற்கு முன் கல்லூரிகளில் எழுதிய தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வழங்க தமிழக அரசு ஆணையிட்டது.

மேலும், இறுதியாண்டு பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் இறுதிப் பருவத் தேர்வை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று  மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக் கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியுடன் ஆன்லைன் மூலமாக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் இறுதியாண்டு இறுதிப் பருவத் தேர்வினை நடத்தியது. செப். 24 முதல் 29 வரை நடைபெற்ற இத்தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் என ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், இத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழக இணைய தளங்களில் இதனை பார்க்க முடியும் .இந்த தேர்வில், அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment