தமிழகத்தின் நிதி நிலைமை! வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் இருக்கின்ற நிதி நிலைமையை விளக்கும் விதத்தில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டு இருக்கின்றார். 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. திமுகவின் இலக்கை தெரிவிப்பதற்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல துறைச் செயலாளர்கள் வெள்ளை அறிக்கையை தயாரிப்பது மிகவும் உதவியாக இருந்தார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்து அந்த அறிக்கைகளை விடவும் கூடுதல் விவரங்களை இதில் சேர்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார் நீதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நோய்த்தொற்று தடுப்பூசி பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் நான்தான் பொறுப்பு என்று தெரிவித்திருக்கிகிறார். இணையதளத்தில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.