மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

Photo of author

By Anand

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

 

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பி டி ஆர் பழனிவேல் தியகராஜன் தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக நிதி அமைச்சராக பதவி ஏற்றது முதல் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது .அதே நேரத்தில் அவர் மீதான விமர்சனங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

 

அவரைப் பொறுத்தவரையில் பாராட்டோ அல்லது விமர்சனமோ எதுவாயிருந்தாலும் தன்னுடைய சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது அதற்கான விளக்கங்களை பதிலாக அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இணையவாசி ஒருவர் கேட்ட கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

 

சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் பெட்டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடு சம்பந்தமாக வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் மற்றும் ஹால்டியா குழுமத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.இதை அமைச்சர் தன்னுடைய பீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

 

நிதி அமைச்சரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு பயனாளி ஒருத்தர் மதுரைக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வந்து அதன் மூலமாக சென்னை கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் நகரங்களை போல மதுரையிலும் தொழிற்சாலைகளையும், ஐடி நிறுவனங்களையும் கொண்டு வந்து தொழில் வாய்ப்புகளைப் பெருக்கி மதுரையை தொழில் நகரமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக நீண்ட காலமாக பணியாற்றி வருவதாகவும், நீங்கள் எதிர்பார்ப்பதை விட பெரிதாக மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்றும் அவர் சூசகமாக பதில் அளித்து இருந்தார்.

 

நிதி அமைச்சரின் இந்த பதில் மூலமாக மதுரைக்கு தொழில் முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.