தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கிழமையில் எந்த நிற ஆடை உடுத்தக் கூடாது தெரியுமா?

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்!! எந்த கிழமையில் எந்த நிற ஆடை உடுத்தக் கூடாது தெரியுமா?

Divya

வாரத்தில் உள்ள ஏழு தினங்களில் எந்த கிழமையில் எந்த நிறத்தில் ஆடை அணியக் கூடாது என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

1)ஞாயிற்று கிழமை

வாரத்தில் முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தக் கூடாது.ஞாயிற்றுக் கிழமையில் கருப்பு நிற ஆடை உடுத்தினால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும்.

2)திங்கட்கிழமை

பள்ளி,அலுவலகம் செல்லும் முதல் நாளான திங்கட்கிழமையில் சிவப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.திங்கட்கிழமை சிவப்பு நிற ஆடை அணிவது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.

3)செவ்வாய் கிழமை

இந்த கிழமையில் பச்சை நிறத்தில் இருக்கும் ஆடையை தவிர்க்க வேண்டும்.இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் நாள் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்குமென்று அர்த்தம்.எனவே செவ்வாய் கிழமையில் பச்சை நிற ஆடை உடுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

4)புதன் கிழமை

சுப நாளான புதன் அன்று வெள்ளை நிறத்தில் இருக்கின்ற ஆடை அணிய வேண்டாம்.இந்த நாளில் மங்களகரமான நிறத்தில் இருக்கின்ற ஆடை அணியலாம்.

5)வியாழக் கிழமை

ஞாயிற்று கிழமை போல் வியாழக்கிழமையிலும் கருப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.இந்த நாளில் கருப்பு நிற ஆடை அணிந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக தோன்றும்.வியாழக் கிழமை கருப்பு நிற ஆடை அணிந்தால் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

6)வெள்ளிக் கிழமை

மங்களகரமான நாளாக பார்க்கப்படும் வெள்ளிக்கிழமையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கின்ற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.இந்நாளில் மஞ்சள்,சிவப்பு போன்ற நிறத்தில் ஆடை அணியலாம்.

7)சனிக்கிழமை

வாரத்தின் கடைசி நாளாக உள்ள சனிக்கிழமையில் வெள்ளை நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக நடக்கும்.