#Chennai: சென்னை மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களிடம் அபாரதம் வசூலிக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கருவியை அறிமுகப்படுத்த உள்ளனர்.
சென்னையில் ஒரு நாளில் 7000 டன் குப்பையானது எடுக்கப்படுகிறது. குறிப்பாக பல இடங்களில் விதிமுறைகளை மீறி பலரும் குப்பைகளை சாலைகளிலேயே கொட்டி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விதிமுறைகள் அமல்படுத்தியும் எந்த ஒரு மாறுதலும் இல்லை. மேற்கொண்டு மாநகராட்சியானது ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது.
இருப்பினும் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவது நிறுத்தப்படாததால் அபராத தொகையை ரூ 5000 ஆக மாற்றினர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதமானது வசூலிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதை நவீன மயமாக்க போக்குவரத்து துறையில் எப்படி போலீசார் அபராதம் விதிக்கும் கருவியை பயன்படுத்துகிறார்களோ அதே போல மாநகராட்சியிலும் அறிமுகப்படுத்த உள்ளனர்.
அந்த வகையில் கிட்டத்தட்ட 500 கருவிகள் முதலில் வாங்கப்பட்டுள்ளது. இதனை 15 மண்டலங்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இனிவரும் நாட்களில் மாநகராட்சியிலும் நவீனமயமாக்கப்பட்ட டிஜிட்டல் கருவி பயன்படுத்தப்படும்.