கொழுந்துவிட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல்! திணறும் தீயணைப்பு வீரர்கள்!
சென்னையில் பூந்தமல்லி அருகே காடுப்பாக்கத்திலுள்ள ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக இரும்புத் தகடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் தொழிற்சாலை சேமிப்பு கிடங்கில் உள்ள பெயிண்ட் மற்றும் மரக்கட்டைகள் ரசாயனங்களில் தீ விபத்து பரவியதை அடுத்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அதிக வேகத்தில் தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பயங்கரமாக எரிந்து வருவதால் வீரர்கள் அனைவராலும் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். மேலும் தீயை கட்டுப்படுத்த கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனிடையே தொழிற்சாலையில் சேமிப்பு குடோன் பகுதியில் தீ பரவாமல் இருப்பதற்காக வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இன்று காலை திடீரென தொழிற்சாலையில் கிழக்குப் பகுதியில் உள்ள சேமிப்பு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது மின்கசிவு காரணமாக இந்த தீ ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பணியாளர்கள் அனைவருக்கும் விடுமுறை காரணமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் பல லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.