மெட்ரோவில் தீ விபத்து!! அலறி ஓடிய பயணிகள் நிலை!!

Photo of author

By Jeevitha

Mumbai: மும்பையில் உள்ள பி.கே.சி. மெட்ரோ நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் உள்ள பி.கே.சி. மெட்ரோ நிலையத்தில் நேற்று தீ விபத்து காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையத்தில் உள்ள நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் பகுதியான A4 வாயிலுக்கு அருகே உள்ள 40 முதல் 50 அடி ஆழத்தில் உள்ள தளபாடங்கள் கடை மற்றும் சேமிப்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கடைகள் அனைத்தும் நுழைவு வாயில் அருகில் இருப்பதால் பயணிகளுக்கு மிக சிரமம் ஏற்பட்டது. அதனால் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயிலில் எந்த ஒரு தீ விபத்தும் ஏற்படவில்லை. இந்த பி.கே.சி. மெட்ரோ நிலையத்தில் மட்டும் தான் மெட்ரோ ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் உள்ள மற்ற இடங்களில் அனைத்து மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த சம்பவம் அறிந்து அதிகாரிகள் பி.கே.சி. மெட்ரோ நிலையத்திற்கு வந்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி எங்கு ஏற்பட்ட தீயை அணைத்தனர். அங்கு ஏற்பட்டுள்ள புகை மூட்டங்கள் குறைந்தவுடன் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு பயணிகள் மீண்டும் சேவையை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.