அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!! தப்பி ஓடிய கொரோனா நோயாளிகள்..

ஆந்திராவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 24 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடினர்.

ஆந்திரா: அனந்தபூர் நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவில் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக கொரோனா நோயாளிகள் இருந்த அறையில் புகை பரவியதால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு இருந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் வேறு ஒரு பாதுகாப்பான அறைக்கு மாற்றும் போது 24 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளிகளை தேடும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Leave a Comment