அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து!!

Photo of author

By Parthipan K

அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து!!

Parthipan K

குஜராத், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

குஜராத்: ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள குரு கோபிந்த் சிங் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் கொரோனா அல்லாத தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்தவுடன் கட்டடத்தில் இருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளை உடனடியாக வேறு ஒரு பாதுகாப்பான கட்டிடத்திற்கு மாற்றினர்.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை பதிவாகவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.