மதுரையில் பயங்கர தீ விபத்து!!

Photo of author

By Parthipan K

மதுரை அருகே டெக்ஸ்டைல் மில் ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி அணைத்தனர்.

மதுரை அருகே விளாங்குடியை சேர்ந்த லக்ஷ்மி சுப்பையாவிற்கு சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலை ஒன்று உள்ளது. வங்கி கடன் செலுத்தாததால் இந்த நூற்பாலை கடந்த மூன்று மாத காலமாக சீல் வைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு நூற்பாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நூற்பாலை அருகே அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பெட்ரோல் பங்க் போன்றவை உள்ளதால் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 8 மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை முழுமையாக அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் கருகி சேதமானது.

விரைந்து வந்து தீயை அணைத்த மதுரை தீயணைப்பு துறை மாவட்ட நிலைய அலுவலர் கல்யாணகுமார் மற்றும் மதுரை டவுன் நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான மதுரை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் அக்கம்பக்கத்தில் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

மூன்று மாத காலமாக மூடிக்கிடந்த நூற்பாலையில் திடீரென எதிர்பாராத விதமாக எப்படி இங்கு தீப்பிடித்து என கூடல்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.