நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!

0
132

ஜிலான் என்பவர் சென்னை அம்பத்தூரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு ஜிலான் ஒரகடத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பிறந்தநாள் விழாவிற்காக சென்றுள்ளார்.மேலும் பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு வீடு திரும்பும்போது தனது காதலியை பார்க்க சென்றுள்ளார்.

இந்நிலையில் காதலியை பார்க்க காதலியின் வீட்டிற்குள் சத்தமின்றி நுழைந்துள்ளார்.அப்பொழுது யாரோ ஒருவர் வருவது போல் தெரிந்ததால் பயந்து போன ஜிலான் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது 45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்ததால் ஜிலான் விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.மேலும் அவர் அலறல் சத்தம் போட்டதால் காதலியின் வீட்டில் இருந்து அனைவரும் வெளியில் வந்தனர்.

இதனை அடுத்து அவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் கயிறு கட்டி உள்ளே இறங்கி ஜிலானை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமாஸ்டர் படத்தின் தேதி ரிலீஸ்.! தயாரிப்பாளர் பேட்டியால் குஷியில் விஜய் ரசிகர்கள்..!!
Next articleசேலத்தில் ‘பிகே’ டீம் முகாம்;?அதிமுகவுக்கு மறைமுகமாக வைத்திருக்கும் ஆப்பு?