சீனாவில் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்து! உடல் சிதறி 4 பேர் பலியானதாக தகவல்!!

0
132
#image_title
சீனாவில் பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்து! உடல் சிதறி 4 பேர் பலியானதாக தகவல்!
சீனா நாட்டில் பட்டாசு கடை ஒன்றில் நடந்த வெடி விபத்தில் உடல் சிதறி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா நாட்டில் ஹெபாய் மாகாணத்தில் டச்செங் பகேதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென்று தீ பிடித்தது. தீ பிடித்ததில் அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. பட்டாசுகள் வெடித்து அங்கிருந்த நபர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர் பட்டாசு வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தொடங்கினர். பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர். விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.