முதலில் உடல் எடையை பாருங்கள் பிறகு விளையாட வாருங்கள்!! வீரரை வெளியேற்றிய மும்பை அணி!!

Photo of author

By Vijay

  முதலில் உடல் எடையை பாருங்கள் பிறகு விளையாட வாருங்கள்!! வீரரை வெளியேற்றிய மும்பை அணி!!

Vijay

First check the body weight then come to play

Prithvishaw: ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து உடல் எடை காரணமாக பிரிதிவி ஷா வை நீக்கி உள்ளது முன்பை அணி.

திறமை இருந்தும் இந்திய இந்திய அணியில் விளையாட முடியாமல் தவிக்கும் முக்கிய வீரர்களில் ஒருவர் பிரிதிவி ஷா. இவர் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். இவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்.

ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடுவதை பார்த்து இந்திய அணியின் பட்டியலில் இடம் பிடிப்பார். ஆனால் இந்திய அணியில் விளையாடும் போது அனைத்து போட்டிகளிலும் சொதப்பி விடுவர் ஒவ்வொரு முறை இந்திய அணியில் இடம்பெற்று விளையாடும்போதும்  சொதப்புவது வழக்கம்.

இந்நிலையில் நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வலைப்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டாமலும் போட்டிகளில் சரியாக விளையாடாமலும் உள்ளார்.  தற்போது உடல் எடை அதிகமாக உள்ளார்  இந்நிலையில் இதன் காரணமாக அவரை இந்த தொடரில் இருந்து நீக்கியுள்ளது மும்பை அணி. இது குறித்து பிரிதிவி ஷா இன்ஸ்டா பக்கத்தில்’ ஓய்வு தேவை. நன்றி’ என பதிவிட்டுள்ளார்