கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!!
கர்நாடகாவின் 16வது சட்டமன்றத்தின் சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்.
கர்நாடக மாநிலத்தின் 16-வது சட்டமன்றத்திற்கான தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் முடிவுகள் 13-ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொள்ள ஏதுவாக 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
முதலில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு ஏதுவாக தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்தனர். தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நிலையில் 16 வது சட்டமன்றத்தின் நிரந்தர சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்காக காங்கிரஸ் கட்சி சேர்ந்த முன்னாள் அமைச்சர் யூ டி காதர் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி கே சிவகுமார் ஆகியோருடன் சென்று சட்டமன்றச் செயலாளர் விசாலாட்சியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஐந்து முறை மங்களூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து எம்எல்ஏவாகியுள்ள யூ.டி. காதர், கடந்த சித்தராமையா ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆட்சியின் போது எதிர்கட்சி துணை தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகராக பதவியேற்க உள்ளார்.