கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் அப்டேட்!!எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்!!

0
190
First look update of Captain Miller movie!! Dhanush fans waiting in anticipation!!
First look update of Captain Miller movie!! Dhanush fans waiting in anticipation!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் அப்டேட்!!எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், நடிதை நிவேதிதா சதீஷ், நடிகர் சந்தீப் கிஷன், நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைப்பு செய்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் பர்ஸ்ட்லுக் என்று கூறி ஒரு மணல் கடிகாரத்தின் சின்னத்தையும் குறித்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதாவது ஜூன் 27ம் தேதி கேப்டன்.மில்லர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கான அனவுன்ஸ்மென்ட் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படக்குழு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பு போஸ்டரில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேதியை மட்டும் குறிப்பிட்டு நேரத்தை குறிப்பிடாததால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

 

 

 

Previous articleவாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!
Next articleகேப்டன் கூல் தோனிக்கு இன்னொரு முகம் இருக்கு!! இந்திய அணியின் பந்துவீச்சாளர் பேட்டி!!