கேப்டன் கூல் தோனிக்கு இன்னொரு முகம் இருக்கு!! இந்திய அணியின் பந்துவீச்சாளர் பேட்டி!!

0
84
Captain Cool Dhoni has another face!! Indian team bowler interview!!
Captain Cool Dhoni has another face!! Indian team bowler interview!!

கேப்டன் கூல் தோனிக்கு இன்னொரு முகம் இருக்கு!! இந்திய அணியின் பந்துவீச்சாளர் பேட்டி!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இன்னொரு முகம் இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அவர்கள் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த எம்.எஸ் தோனி அவர்கள் ஒரு கேப்டனாகவும் கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணிக்கு செயல்பட்டு ஐசிசி நடத்திய மூன்று வித கோப்பைகளையும் இந்திய அணிக்காக வென்று கொடுத்தவர். 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையையும், 2011ம் ஆண்டில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் உலகக் கோப்பையையும், 2013ம் ஆண்டில் நடைபெற்ற சேம்பியன்ஸ் டிராபி தொடரில் சேம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்துள்ளார். 2013ம் ஆண்டில் இந்தகய அணி வென்ற கடைசி ஐசிசி பட்டம் தோனி தலைமையில் வென்ற சேம்பியன்ஸ் டிராபி ஆகும்.

மேலும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 மூறை ஐபிஎல் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். மைதானங்களில் போட்டி நடைபெறும் பொழுது மகேந்திர சிங் தோனி அவர்கள் எப்பொழுதும் பொறுமையுடனே இருப்பார். அதன் காரணமாகவே மகேந்திர சிங் தோனிக்கு கேப்டன் கூல் என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் எப்பொழுதும் பொறுமையாக இருக்கும் மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு கோபம் வரும் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா அவர்கள் கூறியுள்ளார்.

இஷாந்த்  ஷர்மா அவர்கள் மகேந்திர சிங் தோனி பற்றி ” ஆக்ரோஷமாக அணியை நடத்தும் கேப்டன்களுக்கு மத்தியில் மகேந்திர சிங் தோனி சிறிதளவு வித்தியாசமானவர். போட்டிக்காக பயிற்சி எடுக்கும் பொழுது தோனி அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தால் அவர் மனதில் ஏதோ ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருக்கின்றது. மகேந்திர சிங் தோனி அவர்கள் எதையோ பற்றி தீவிரமாக சிந்தித்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம். அவர் சிந்தனையில் இருக்கும் பொழுது யாராவது அவரிடம் எதைப் பற்றியாவது கேட்டால் அவர் கோபமாகிவிடுவார். ஆனால் மகேந்திர சிங் தோனி அவர்களின் அந்த கோபம் தந்தை மகன் மீது காட்டும் அன்பு போலத்தான்” என்று கூறியுள்ளார்.