தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக அங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னை தலைமை சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மழை பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டனர்.
மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் நிவாரண பணிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு தங்கு, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.