நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!!

Photo of author

By Parthipan K

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!!

Parthipan K

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்று முதல் தொடங்குகிறது.

நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இதன்படி தமிழகத்தில் மட்டும் 15 சதவீதமான 547 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 15 பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான (2020-21) மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. இந்த முதல்கட்ட கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளம் மூலம் நடத்துகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முதல் கட்ட கலந்தாய்வுக்கு ஆன்லைனில் இன்று முதல் நவம்பர் 2ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.