அட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

Photo of author

By Jeevitha

அட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

Jeevitha

First song release of Atlee's Hindi movie!!

அட்லீ இயக்கிய ஹிந்தி படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

ஜவான் என்ற திரைப்படத்தை தமிழில் பிகில், தெரி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். மேலும் இவர் ஜவான் படம் மூலம் ஹிந்தி திரை இயக்குனராக அறிமுகாகிறார். இவர் இந்த படத்தை பாலிவுட் நடிகரான ஷாருக் கான் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

ஜவான் திரில்லர் அதிரடி படம் என்று படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த திரைப்படத்தை கௌரி கான் தயாரிக்கிறார். அதனை தொடர்ந்து ஜவான் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தீவரமாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து சாவன் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜவான் படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் இசை உரிமம் இதுவரை  400 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்பு இசை உரிமத்தை டீ சீரியஸ் நிறுவனம் 36 கோடிக்கு வாங்கி உள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.

இந்த நிலையில் ஜவான் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த  பாடல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது.