வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

0
172

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி 20 போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் 3 வெஸ்ட் இண்டீசிலும் கடைசி 2 ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது.

இதையடுத்து முதலாவது 20 ஓவர் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் களம் இறங்க உள்ளனர். வளரும் வீரர்களான ஜெய்ஷ்வால்,திலக் வர்மா, முகேஷ் குமார், போன்றவர்கள் தங்களது திறமையை காட்ட இது அருமையான ஒரு தருணமாகும். 20 ஓவர் என்றாலே வெளுத்து வாங்கும் சூர்யாகுமாரின் அதிரடியை இதில் எதிர் பார்க்கலாம்.அதேபோல சுப்மன் கில், இஷான் கிஷான், ஆகியோர் ரன் வேட்டையை கட்டாயம் தொடருவார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் குறைந்த ஓவர் என்றாலே அதிரடியாய் விளையாட கூடியவர்கள். அந்த அணியில் தற்போது 20 ஓவர் லீக் கிரிக்கெட்டில் 137 ரன்கள் எடுத்ததோடு நிக்கோலஸ் பூரன் இணைந்துள்ளார்.  ஜான்சன் சார்லஸ், ரோஷ்டன் சேஸ், பிரான்டன் கிங், கைல் மேயர்ஸ்,. ஹெட்மேயர், போன்றோர் வாய்ப்பு கிடைத்தால் மிரட்ட கூடியவர்கள் என்பதால் இந்தியாவுக்கு பெரும் சவலாக தான் இருக்கும.

இந்த இரு அணிகளும் இதுவரை மோதிய 25 ஆட்டங்களில் 17-ல் இந்தியா, 7-இல் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் நடைபெற உள்ள லாரா ஸ்டேடியத்தில் தான் இந்திய அணி ஒருநாள் போட்டியில் 351 ரன்கள் குவித்தது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ள இந்த ஆட்டத்தை டி.டி.ஸ்போர்ட்ஸ், பொதிகை சேனல்கள்,நேரடியாக ஒளிபரப்ப உள்ளன. மேலும் மழை பெய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

இந்தியா:

சுப்மன் கில், ஜெய்ஸ்வால், இஷான் கிஷான்  அல்லது சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய், முகேஷ்குமார், உம்ரான் மாலிக் அல்லது அவேஷ்கான்.

வெஸ்ட் இண்டீஸ்:

பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ரோமன் பவெல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்டு அல்லது ஒடியன் சுமித், அகில் ஹூசைன், அல்ஜாரி ஜோசப் அல்லது ஒஷானே தாமஸ்.

Previous article“சூப்பர் ஸ்டார்” என்பது ஒரு பட்டம் தான்!! பஞ்சாயத்தை முடித்து வைத்த இயக்குனர்!!
Next articleநாளை இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!