இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! இந்த வீரர் விலகலா? வெளிவந்த தகவல் 

0
430

இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி! இந்த வீரர் விலகலா? வெளிவந்த தகவல் 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் விலகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி மராட்டியத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட இந்த தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்ட முடியும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை  இந்திய மண்ணில் இழந்த பிறகு சொந்த  நடந்த 15 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனை படைத்து வருகிறது. இதனுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டி தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. இதனால் சொந்த மண்ணில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், தொடரை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாக்பூரில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இதே போல் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர்  கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டார்.

மேலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத காரணத்தினால் முதலாவது டெஸ்டில் ஆடுவது சந்தேகம் தான் என்று செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பெங்களூர் பயிற்சியில் கேமரூன் கிரீன் கலந்து கொள்ளவில்லை.இந்நிலையில் அவர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

Previous articleஒரே நாடு ஒரே வரி என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது! மக்களவையில் கனிமொழியின் அனல் தெறிக்கும் பேச்சு! 
Next articleடிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here