உடனடி நிவாரணம் வேண்டும்! விரக்தியில் படகுகளை எரித்து மீனவர்கள் வேண்டுகோள்!

Photo of author

By Parthipan K

புயலால் சேதமடைந்த படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை அடுத்த பாம்பன் என்ற இடத்தில் சென்ற மாதம் 17ஆம் தேதியன்று வீசிய பலத்த காற்றினால், இதுவரை 20க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் சேதம் அடைந்து உள்ளன. சில படகுகள் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அதே போல் சில விசைப்படகுகள் நங்கூர கயிறுகளை அறுத்துக் கொண்டு கடலில் மிதந்தபடி சென்று பாம்பன் பாலம் அருகே இருக்கக்கூடிய கற்களின் மீது மோதி சேதம் அடைந்து கரை ஒதுங்கியுள்ளது.

இதை கண்ட மீனவர்கள் மிகவும் மனமுடைந்து பாதிக்கப்பட்ட படகுகளுக்கும் மீனவர்களுக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்குவது குறித்தும் சேத மதிப்புகளை  கணக்கிட்டும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிவாரணம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீனவர்கள் மீது விரக்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில், சேதமடைந்த பகுதிகளை சரிசெய்து மீன்பிடிக்க பயன்படுத்த முடியாத சூழ்நிலையில், மிகவும் மன உளைச்சல் அடைந்த அவர்கள், படகுகளில் இருந்த மோட்டார்களை மட்டும் கட்டிக் கொண்டு மீதமுள்ள மரப்படகுகளை  தீயிட்டுக் கொளுத்தி விட்டனர். மேலும் அரசு உடனடியாக நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.