வலிப்பு வந்தால் இதை தான் முதலில் செய்ய வேண்டும்! டாக்டர் அறிவுரை!

Photo of author

By Kowsalya

பல மக்களுக்கு திடீரென நம் பக்கத்தில் உள்ளவருக்கு வலிப்பு வந்தால் என்ன செய்வது என்றே தெரியாது. நாம் படத்தில் காண்பது போல் ஒரு இரும்பு சாவியோ அல்லது இரும்பு பொருட்களையோ கையில் வைத்தால் வலிப்பு நின்று விடும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் வலிப்பு வந்தால் எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறும் இந்த அறிவுரையை கேளுங்கள்.

உங்களுடன் இருக்கும் நபருக்கு திடீரென வலிப்பு வந்தால் உடன் செய்ய வேண்டியது:

1. திடீரென உங்களது பக்கத்தில் உள்ள ஒருவருக்கு வலிப்பு வந்தால் அவரை மெதுவாக தரையில் ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும்.

2. வலிப்பு வந்தவரின் கைகளில் கடினமானது அல்லது காயம் படும்படி ஏதாவது பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. வலிப்பு வந்தவர்கள் தங்களது கை கால் தலை ஆகியவற்றை ஆட்டுவார்கள், அப்படி ஆடும் பொழுது, தலை தரையில் அடித்துக் கொள்ளாமல் இருக்க தலைக்கு அடியில் துண்டு அல்லது துணியையோ வைக்க வேண்டும்.

4. கண்ணாடியோ அல்லது இருக்கமான உடையோ அல்லது டை போன்றவற்றை கட்டி இருந்தால் அவிழ்த்து விட வேண்டும்.

5. வலிப்பு வந்தவர்களின் உடம்பு உதறலில் இருக்கும் பொழுதும் அவரின் உடலை அழுத்தக்கூடாது. வலிப்பு நிற்கும் வரை அப்படியே அமைதியாக இருக்க வேண்டும்.

6. வாயில் எதுவும் வைக்கக்கூடாது. கையிலும் எந்த பொருளையும் கொடுக்கக்கூடாது.

7. சிபிஆர் எதையும் கொடுக்கக்கூடாது. வலிப்பு நிற்கும் வரை அவருக்கும் உணவோ தண்ணீரோ என்று எதையும் கொடுக்கக் கூடாது.
8. கையில் இரும்பு சம்பந்தமான பொருளை கண்டிப்பாக கொடுக்கவே கொடுக்காதீர்கள்.

நீங்கள் இரும்பை கொடுத்தீர்கள் என்றாலும் கொடுக்கவில்லை என்றாலும் இரண்டு – ஐந்து நிமிடங்களில் வலிப்பு தானாகவே நின்று விடும்.

நீங்கள் வலிப்பு வந்தவர் இடத்தில் இந்த மாதிரியான முதலுதவிகளை செய்யும் பொழுது, எந்த பாதிப்பும் இல்லாமல் அவர் இருப்பார். நீங்கள் எதையோ செய்ய போக அவரோட உயிருக்கே பாதிப்பு ஆகிவிடும், அதனால் மேற்கண்டவற்றை கடைப்பிடியுங்கள்.