World

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ஐந்து நாட்கள் ஆழ்ந்த இரங்கல் அறிவிப்பு – அமெரிக்கா!

கொரோனா வைரஸ் பரவல் நீடித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், தடுப்பு மருந்துகள் ஒரு பக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. 

அதிலும் உருமாறிய கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெளிநாட்டில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இதனை நினைவு கூறும்  வகையில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு இறந்தவர்களுக்காக இரங்கல் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் அவர்களின் சார்பாக வெள்ளை மாளிகை முழுவதும் உருகும் மெழுகுவர்த்தி ஏற்றி ஐந்து நிமிடம் மௌனமாக இருந்து   இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதில் அவருடைய மனைவி  ஜில்பைடன் மற்றும் துணை அதிபரும் அவருடைய குடும்பத்தாரும் கலந்துகொண்டு இரங்கலை தெரிவித்துள்ளனர். ஐந்து நாட்கள் இரங்கல் குறித்து அவர் கூறுகையில் நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Comment