ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று வெளியிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகள்

0
235

கொரோனா ஊரடங்கு கடும் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளார திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதனை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்புகள்:

  • ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான சலுகை ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
  • சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 90 நாள் கால கடன் வசதிகளை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு மேலும், 90 நாட்கள் நீட்டித்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Previous articleரம்ஜான் தொழுகை – நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
Next articleபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here