ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் -2023 குரு சண்டாள யோகம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

0
282
Five zodiac signs to watch out for - 2023 Guru Sandala Yoga Which zodiac signs do you know?
Five zodiac signs to watch out for - 2023 Guru Sandala Yoga Which zodiac signs do you know?

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் -2023 குரு சண்டாள யோகம் எந்த எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி செய்ய உள்ளார். குரு, வியாழன் மற்றும் ராகு ஆகிய மூவரும் மேஷத்தில் இணைவதால் குரு சண்டாள யோகம் நடைப்பெற உள்ளது இதனை அசுப யோகம் என்றும் சொல்வார்கள். நிழல் கிரகமான ராகுவை, ஒளி கிரகமான குரு பார்ப்பதால் இந்த அசுப யோகம் நடைப்பெறுகிறது. திடீர் மாற்றங்கள் அல்லது திடீர் அதிர்ஷ்டம் நடக்கவிருகிறது.வரும் ஆறு மாத காலத்திற்கு பல பிரச்சனைகள் வர இருக்கிறது. பிரச்சனைகளை சந்திக்கவிருக்கும் அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார்‌யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
குரு சண்டாள யோகம் மேஷ ராசியில் தொடங்குவதால் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. உடல்நலம் மீது அக்கறை வேண்டும். பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீண் செலவு வந்து போகும். எந்த வேலை செய்தாலும் நிறைவாகவே இருக்காது. மன அழுத்தம் ஏற்படும். இந்த ஆறு மாத காலம் சற்று கவனமாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.

மிதுனம்
வரும் ஆறு மாத காலத்திற்கு எந்த ஒரு புதிய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நல்லது. உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பிரச்னைகள் வரும். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் சற்று கவனமாக செயல்பட வேண்டும் .

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள யோகத்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும். மன
இல்லை வரும். குலதெய்வ வழிபாடு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். குரு 8 லவ் இருப்பதால் பண கஷ்டம் மன கஷ்டம் மற்றும் செத்து வாங்குவதில் பிர்ச்சனைகள் வரும் ஆதலால் இந்த ஆறு மாத காலத்திற்கு சற்று கவனமாக செயல்பட வேண்டும்.

தனுசு
குரு 5ல் அமர்வதால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எந்த காரியம் தொடங்கினாலும் சில பல பிரச்சனைகளை சந்தித்த பிறகு வெற்றி பெற இயலும். பணம் கையில் இருந்தாலும் உங்களால் சரி வர சேமிக்க இயலாது. ராக பெயர்ச்சிக்கு பின்பு உங்கள் வாழ்வில் மேன்மை அடையலாம்.

மகரம்
உங்கள் பயணத்தின் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்படும். மனதில் பல குழப்பங்கள் வந்து செல்லும்.இந்த ஆறு மாத காலம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். செய்யும் செயலில் யோசித்து முடிவு எடுத்தால் மேன்மை அடையலாம்.