வாடிக்கையாளர்களுக்கு நற்செய்திகளை வெளியிட்ட தேசிய மற்றும் தனியார் வங்கிகள்!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% இருந்து 5 புள்ளியாக அதிகரித்தது.

இதனையடுத்து பொதுவுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் வீட்டுக்கடன், வாகனகடன், தொழில்கடன், என அனைத்து வகை கடன்களுக்கும் வட்டி விகிதங்களை அதிகரித்தன.

அதோடு வங்கிகள் தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கு ஆரம்பித்து ஆர் டி மற்றும் எஃப்டிக்கான வட்டி விகிதங்களையும் போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு இந்த வட்டி விகிதங்களை அதிகரித்திருக்கின்றன வங்கிகளின் வட்டி விகிதம் என்ன என்பது தொடர்பாக இங்கே நாம் பார்க்கலாம்.

பந்தன் வங்கி

தனியார் வங்கியான பந்தன் வங்கி மற்ற வங்கிகளை விடவும் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.75% வட்டி வழங்குகிறது. பொதுவாக மற்ற வங்கிகள் 0.50 சதவீதம் வட்டி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதோடு 2 கோடி ரூபாய் உட்பட்ட வாய்ப்பு தொகைகளுக்கு வட்டி விகிதம் திருத்தப்பட்டிருக்கின்ற நிலையில், புதிய வட்டி விகித மாற்றங்கள் ஜூலை மாதம் 4ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு அமலுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனடிப்படையில், மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான நிலையான வாய்ப்புத் தொகை 3.75 சதவீதம் முதல் 6.35% வரையில் வழங்குகிறது.

2 வருடங்களிலிருந்து 5 வருடங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வாய்ப்புத் தொகை வைத்திருக்கும் மூத்த குடி மக்களுக்கு அதிகபட்சமாக 7.24% வழங்குகிறது இந்த மாற்றம் தற்போதைய பணவீக்கத்தை விட 0.21% அதிகமாகும்.

டிசிபி வங்கி

இந்த வங்கி 2 கோடி ரூபாய் கீழே இருக்கின்ற நிலையான வாய்ப்புகள் வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகித மாற்றத்தை ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் அமல்படுத்தியது. இதன்படி 7 நாட்கள் முதல் 120 மாதங்கள் வரையிலான எஃப்டி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 5.30 சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரையில் வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கிறது.

அதோடு 18 முதல் 120 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வாய்ப்புத் தொகை வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.10 சதவீதம் வட்டி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு பணவீக்க விகதத்தை விட 5 புள்ளிகள் அதிகம் என சொல்லப்படுகிறது.

ஆர்பிஎல் வங்கி

இந்த வங்கியில் 2 கோடிக்கு குறைவான நிலையான வாய்ப்புத் தொகை காண வட்டி விகிதங்களை ஜூன் மாதம் 8ம் தேதி முதல் இந்த வங்கி நிர்வாகம் அதிகரித்தது. அதன்படி தற்போது 7 நாட்கள் முதல் 240 மாதங்கள் வரையில் முதிர்ச்சியடையும் நிலையான வாய்ப்புத் தொகையை வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 6.25% வரையில் வட்டி விகிதம் வழங்கியிருக்கிறது.

அதோடு 15 மாதங்களில் முதிர்ச்சியடையும் இணையான வைப்புக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.15 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது பண வீக்கத்தை விட 0.11% அல்லது 11 அடிப்படை புள்ளிகள் அதிகம் என சொல்லப்படுகிறது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான மதிப்பு தொகை காண வட்டி விகிதங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 தினங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான முதிர்ச்சியடையும் எஃப்டி கணக்கிற்கு 3.75% முதல் 7.25% வரையில் வட்டியை வழங்குகிறது.

3 முதல் 10 வருடங்களுக்கிடைப்பட்ட முதிர்வு காலத்துடன் கூடிய வாய்ப்புத் தொகைகளுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீதம் வரையில் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது பணவீக்க விகிதத்தை விட 0.21 சதவீதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.