FLASH: சீமான் மீது கைது நடவடிக்கை.. கழுத்தை நெருக்கும் திமுக மற்றும் அதிமுக!!
நாம் தமிழர் கட்சி சீமானை ஆளும் கட்சி எதிர் கட்சி என்ற இரு பக்கமும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக கூட்டணியை நாம் தமிழர் நேரடியாகவே கேட்டனர்.மேற்கொண்டு அதிமுக கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அதில் நாம் தமிழர் கட்சியும் ஆதரவு கொடுத்தது.ஆனால் நாம் தமிழருக்கு அதிமுக ஆதரவு கொடுக்கவில்லை.
இதன் வெளிப்பாடாக சீமான் ஓர் பேட்டியில் அம்மா நினைவிடம் குறித்து சர்ச்சையாக பேசினார்.அதில், இரு திராவிட தலைவர்கள் நடுவில் படுத்திருந்தா நடுவுல படுத்திருக்குனு தான் சொல்லமுடியும், இப்படி சொல்வது தவு என சொல்கிறீர்கள் என்றால்,சாஷ்டாங்கமாக விழுந்துள்ளார்னு தான் சொல்லணும் என்று கூறினார்.
இவ்வாறு அவர் பேசியது அதிமுக-விடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் நிர்வாகி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவரது சாதியை வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் பாட்டு பாடினார்.
இதற்கு ஆளும் கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேற்கொண்டு அவர் அவதூறாக பேசியதற்கு கைதும் செய்யப்பட்டார்.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீமான் நானும் அதே பாடலை பாடுகிறேன் என்னையும் கைது செய்யுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டார்.
இவ்வாறு அவர் சவால் விட்டதால் உடனே இவரையும் கைது செய்யுமாறு ஆளும் கட்சி அமைச்சர்கள்,நிர்வாகிகள் பலரும் முதல்வரிடம் கூறி வருகின்றனர்.அதேபோல இவரை அப்படியே விட்டுவிட்டால் இவரின் தொடராக மற்ற கட்சியை சேர்ந்தவர்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள் இதற்கு தற்பொழுதே முற்றுப்புள்ளியை வைக்குமாறு கூறி வருகின்றனர்.இதனால் ஆளும் கட்சி எதிர் கட்சி என இருவரும் சீமானை கைது செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையில் உள்ளனர்.