FLASH: இரவு 1 மணி வரை பாட்டு பொதுமக்களுக்கு தொடர் இடையூறு.. விராட் கோலி மீது பாயிந்த FIR!!
டி20 உலக கோப்பை போட்டியானது இறுதியாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையை நடைபெற்றது. இதில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாஅமோக வெற்றியடைந்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக இந்தியா வந்ததும் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு திறந்தவெளி பேருந்தில் மக்களுடன் மக்களாகவும் வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் இதுவே தனது கடைசி டி20 உலக கோப்பை என விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் கூறியுள்ளனர். தாங்கள் ஓய்வு பெற போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெற்றி கொண்டாட்டத்தோடு உடனடியாக விராட் கோலி லண்டன் சென்றுள்ளார். இதனிடையே இவர் நடத்தி வரும் க்ளப் ஒன்று நேர கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு உள்ளதாக பெங்களூர் போலீசார் வழக்கு தொடுத்துள்ளனர்.
விராட் கோலிக்கு சொந்தமாக பெங்களூரில் ஒன் எய்ட் கம்யூன் என்ற க்ளப் உள்ளது. இது இரவு 12 மணியை கடந்து ஒரு மணி வரை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் பெங்களூர் போலீசார் அந்த ரெஸ்டாரன்ட் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கிளப்பில் மக்களுக்கு இடையூறு வகிக்கும் வகையில் பாட்டு இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் க்ளப் போன்றவை இயங்க நேர கட்டுப்பாடு என்ற ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனையும் மீறி தற்பொழுது இயங்கி உள்ளதால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த வழக்கு விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.