FLASH: அடுத்தடுத்த ஷாக்.. கடலூர் நகர முன்னாள் பாமக தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!

Photo of author

By Rupa

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. கடலூர் நகர முன்னாள் பாமக தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!

பகுஜன் சமாஜ் மாநில கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கை மர்ம கும்பல் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உருக்குலைக்க வைத்துள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் பாமக பிரமுகரை நான்கு பேர் சேர்ந்த மர்ம கும்பல் வெட்டி சாய்த்து உள்ளனர்.இவர் முன்னாள் கடலூர் மாவட்ட பாமக தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சூரப்ப நாயக்கன் சாவடி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.திடீரென்று வந்த மர்மகும்பல் கையில் வைத்துள்ள ஆயுதங்களை கொண்டு இவரை சரமாரியாக தாக்கியுள்ளது.ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேற்கொண்டு போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.தலைமை அதிகாரம் சரியில்லாததால் சட்டம் சீர் குலைந்து இருப்பது இவ்வாறான சம்பவங்கள் மூலம் உணர முடிகிறது.