FLASH: இவர்களுக்கு ரூ 2 லட்சத்திலிருந்து ரூ 4 லட்சமாக நிதி இரட்டிப்பு!! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!
தமிழக சட்டசபை கூட்டமானது கடந்த 19ஆம் தேதி தொடங்கி இன்று ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது.இன்று உதயநிதியின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மானியக் கோரிக்கை என்பதால் அனைவர் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகளவில் எழுந்துள்ளது.அந்த வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் மூலம் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறிவந்தனர்.
அதன்படி ஹாக்கி, கால்பந்து, கபாடி போன்ற விளையாட்டு வீரர்கள் தங்கும் வகையில் புதிய விடுதிகள் கட்டப்படும் என்று கூறியுள்ளார்.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடனும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் மேலக்கோட்டையூரில் செயற்கை இலை ஹாக்கி ஆடுகளம் இருக்கும் பட்சத்தில் அதனுடன் நவீன மயமாக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.5 கோடி செலவில் நவீன விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகவும் தெரிவித்தார்.அதேபோல தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு வழங்கி வந்த ஊக்கத்தொகையும் இரட்டிப்பாகி அறிவித்துள்ளார்.அந்த வகையில் 14 இலட்சத்திலிருந்து 28 லட்சமாக உயர்த்தி உள்ளது.
மேலும் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் முறையில் கடன் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.அதேபோல தமிழகத்தில் உள் வெளி விளையாட்டு அரங்கங்கள் மாற்றுத்திரனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைப்பதாக தெரிவித்துள்ளனர்.அதேபோல தங்கம் மற்றும் வெள்ளி வென்று வரும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 2 லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தியுள்ளனர்.இதுபோல எண்ணற்ற புதிய அறிவிப்புக்களை இந்த பட்ஜெட் தாக்கல் மூலம் தெரிவித்துள்ளனர்.