FLASH: ஆள விடுங்க நான் கிளம்புறேன்.. மாறப்போகும் தமிழக பாஜக தலைமை!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் ரீதியாக படிப்பதற்கு ஆறு மாத காலம் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார். இதனால் கட்சி சம்பந்தமான அனைத்து பொறுப்புகளையும் கேசவ விநாயகத்திடம் ஒப்படைப்பதாக தகவல்கள் வெளிவந்தது.இருப்பினும் உட்கட்சி மோதல் தொடர்ந்து இருந்து வருவதால் இவர் பதவிக்கு தமிழிசை அல்லது வானதி சீனிவாசன் வர அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
குறிப்பாக மக்களவைத் தேர்தல் முடிவுகளடுத்து தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அண்ணாமலைக்கிடையே இணையத்தில் வாக்குவாத போரொன்று நடைபெற்றது. உட்கட்சியில் இருக்கும் இருவரும் இப்படி வாக்குவாதம் செய்து கொள்வது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவருக்கும் இது பேசும் பொருளாக அமைந்தது.இதனை தவிர்க்கும் வகையில் அமித்ஷா தமிழிசை சௌந்தர்ராஜனை மேடையிலே வைத்து வார்னிங் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலையும் தமிழிசை வீட்டிற்கு சென்று தனது வார்த்தை போரை முடித்துக் கொண்டார்.இந்த பரபரப்பு முடிவதற்குள் திடீரென்று தமிழிசையும் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.இது அனைத்தும் பாஜக மாநில தலைவர் மாறுவதற்கான நடவடிக்கையாகவே உள்ளது.இதனிடையே அண்ணாமலை வெளிநாட்டிற்கு செல்ல உள்ளதால் இவர் திரும்பி வரும் வரை இவரது பதவிக்கு மாற்றுத் தலைவர் நியமனம் செய்யப்படலாம் என்று கூறுகின்றனர்.இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.