FLASH: இனி ரூ 1000 இல்லை குடும்பத்திற்கு ரூ 3000..  தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!!  

Photo of author

By Rupa

FLASH: இனி ரூ 1000 இல்லை குடும்பத்திற்கு ரூ 3000..  தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!!

தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மகளிருக்கு உதவும் நோக்கில் கலைஞர் உரிமைத் தொகை திட்டமும், மாணவிகளுக்கு உதவும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் புதல்வன் உள்ளிட்டவை செயல்படுத்தியுள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்:
மகளிரின் அன்றாட உழைப்பை பறைசாற்றும் விதமாக அவர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற வீதம் ஒரு கோடி பேருக்கு தற்பொழுது வரை வழங்கியுள்ளனர். மேற்கொண்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கும் தற்பொழுது உரிமைத்தொகை வழங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி இனி வருடம் தோறும் இந்த பட்டியலில் புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பிப்பவர்கள் உள்ளிட்டோரை சேர்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

புதுமைப்பெண் திட்டம்:
அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் மற்றும் பட்டைய படிப்பிற்கு ஏற்றவாறு ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை மாற்றியமைத்து உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற ஒன்றை அமல்படுத்தினர். இதன் மூலம் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியின் இடைநிற்றலை தடுக்க மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தற்பொழுது இது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

தமிழ் புதல்வன் திட்டம்:
தமிழ் புதல்வன் திட்டமானது புதுமைப் பெண் திட்டத்துடன் இணைந்ததுதான். இதுவும் அரசு பள்ளியில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியின் இடைநிற்றல் மற்றும் போதைப் பொருல் உள்ளிட்ட பழக்கங்களில் ஈடுபடாமலிருக்க தமிழக அரசு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா மகன் மகள் என மூவருக்கும் உதவித்தொகை கிடைக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது.