FLASH: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Photo of author

By Rupa

 

போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் இந்த மூன்றாண்டு ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு மீண்டும் 11வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.மேலும் இனிவரும் நாட்களில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தான் ஊதிய உயர்வு என்றும் தெரிவித்தனர்.

தற்பொழுது அதற்கான காலவரையும் 2023 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து துறையில் பணியாற்றி வயது மூப்படைந்த்வர்கள் தங்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குதல்,தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு போன்றவற்றை பற்றி தமிழக அரசிடம் பல முறை எடுத்துக் கூறியும் கண்டுகொள்ளவில்லை.

தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் இது குறித்து போராட்டம் நடத்தியும் கோரிக்கை வைத்தும் வருகின்றனர். இந்த 15 வது கட்ட போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆகஸ்ட் இறுதிக்குள் பேசப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்டாயம் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு எனத் தொடங்கி  வாரிசுகளுக்கு பதவி வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக பாஜக தலைவரும் போகுவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்கும் படியும் அவர்களை போராட்டம் வரை நடத்த வழி செய்து விட வேண்டாமென தமிழக அரசை அறிவுறுத்தி கூறியுள்ளார்.