FLASH: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை இல்லை.. தமிழக அரசின் அதிருப்தி நடவடிக்கை!!

Photo of author

By Rupa

 

FLASH: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை இல்லை.. தமிழக அரசின் அதிருப்தி நடவடிக்கை!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் புத்தகங்கள் போன்றவற்றை வழங்காமல் இருப்பது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சமீப காலமாக தமிழக அரசு மீது பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதிலும் தற்பொழுது பள்ளி திறந்து ஒன்றரை மாதங்களாகியும் மாணவிகளுக்கு முறையான சீருடைகள் வழங்கப்படவில்லை. அதேபோல நோட்டுப் புத்தகங்களும் வழங்கவில்லை.

இது குறித்து பெற்றோர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்து வருகின்றனர். அது மட்டுமின்றி பல ரேஷன் அட்டைகளிலும் அரிசி பருப்பு பாமாயில் போன்றவை வழங்கப்படாமல் தான் உள்ளது. அனைத்தும் கையிருப்பில் உள்ளது எனக் கூறும் தமிழக அரசு அதனை தற்போது வரை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அது மட்டுமின்றி கும்பகோணம் பகுதியில் பள்ளி மாணவர்களை கண்டால் அரசு பேருந்து நிற்பதே இல்லை.

இது குறித்த புகார் பல இடங்களிலிருந்து வந்த வண்ணமாக தான் உள்ளது. இதனையெல்லாம் தமிழக அரசு கவனம் கொண்டு வந்து முறையாக சரி செய்யும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான சீருடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்களை தமிழக அரசு தள்ளி விட்டுள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.

வருடந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பள்ளி சீருடைகள் வழங்குவது வழக்கம். ஆனால் இம்முறை 1 மாதத்திற்கு மேலாகியும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவில்லை.இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையும்  வாய் திறக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.