FLASH: காலி மதுபான பாட்டிலுக்கு 7 கோடி வரை பணம்!! டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமடுத்து டாஸ்மாக்கில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் போவதாக பல அறிவிப்புகள் வந்த வண்ணமாக உள்ளது.அந்த வகையில் மது குடித்துவிட்டு போடப்படும் பாட்டில்களால் விளைநிலம் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்றும் வருகிறது.
இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. விளைநிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க மேலும் பாட்டில்களை மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் டாஸ்மாக் சார்பாக புதிய அறிவிப்ப ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.இனி மதுபானம் குடித்துவிட்டு கொடுக்கப்படும் காலி பாட்டில்களுக்கு பணம் வழங்குவதாக கூறியுள்ளனர்.
இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருமென்றும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் முதல் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனை விசாரணை செய்த நீதிபதிகள் ஒரு நாளுக்கு எத்தனை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்கு பதிலளிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம், ஒரு நாளில் 70 லட்சம் வரை மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.