Flashback: ஜெயலலிதாவை நான் எதிர்க்க இது தான் காரணம்!! ரஜினி ஓபன் டாக்!!

0
60
Flashback: Do you know the reason why Rajinikanth campaigned against Jayalalithaa in 1996 Assembly elections?
Flashback: Do you know the reason why Rajinikanth campaigned against Jayalalithaa in 1996 Assembly elections?

Cinema: ரஜினிகாந்த் 1990களில் ரொம்பவே பிரபலம். அதாவது 1990 முதல் 2000 காலகட்டங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் தான் வெற்றி பெற்றிருப்பார். அந்த அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் படை மற்றும் மக்களின் ஆதரவு இருந்தது.

ஆர்.எம்.வீரப்பன் திரைப்பட தயாரிப்பாளர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கிய மந்திரியாக பதவி வகித்தவர். இவர் ரஜினிகாந்தை வைத்து நிறைய படங்களை தயாரித்துள்ளார். பாட்ஷா படத்தையும் ஆர்.எம்.வீரப்பன் தான் தயாரித்திருந்தார். பாட்ஷா படத்தின் நூறாவது நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இப்போது வெடிகுண்டு கலாச்சாரம் ரொம்பவே அதிகமாகி விட்டது என்று மேடையில் பேசினார். இந்த நூறாவது நாள் விழாவில் ஆர்.எம்.வீரப்பனும் கலந்து கொண்டார்.

அந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா நீங்கள் இருந்த மேடையில் அவர் எப்படி நம் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியும், அவர் நம் ஆட்சியை பற்றி குறை சொல்வதை பற்றி ஏதும் பேசாமல் நீங்கள் வாயை மூடி ஏன் அமர்ந்திருந்தீர்கள் என்று ஆர்.எம்.வீரப்பனை திட்டி அவருடைய அமைச்சர் பதவியையும் பறித்துவிட்டார்.

பின்னர் இந்த நிகழ்வு பற்றி ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பனிடம் கேட்டபோது பதவிதானே, இன்னைக்கு போகும், நாளைக்கு வரும், இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று ரொம்ப யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். இந்த விசயம் ரஜினியின் மனதை ரொம்பவே உறுத்தியுள்ளது. பின்னர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இனி ஜெயலலிதா தமிழ்நாட்டை ஆட்சி செய்தால் இந்த தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தது தான் ஜெயலலிதாவை எதிர்க்க காரணம் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇந்த மாதிரியான விஷயங்களை விஜய் எப்பவும் விரும்பமாட்டார்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!
Next articleதிருமணத்தை மீறிய தகாத உறவு.. லேப்டாப் ஆப் செய்தால் வீட்டில் சொல்லிவிடுவேன்!! BlackMail செய்யும் AI!!