குடியிருப்புகளில் விழுந்த விமானம்: 27 பேர் பரிதாப பலி!

Photo of author

By CineDesk

குடியிருப்புகளில் விழுந்த விமானம்: 27 பேர் பரிதாப பலி!

காங்கோ நாட்டில் குடியிருப்பு பகுதியில் விமானம் ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த 27 பேர் பரிதாபமாக பலியாகினர். இன்னும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

கிழக்கு டெமாக்ரடிக் ரிபப்ளிக் காங்கோ என்ற நாட்டில் உள்ள கோமா என்ற நகரத்தில் திடீரென ஒரு விமானம் நிலை தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களில் இந்த விபத்தில் நிகழ்ந்ததாகவும், இந்த விபத்திற்கு விமானத்தில் உள்ள எஞ்ஜீன்கள் பழுதானதே தான் காரணம் என்றும் கூறப்படுகிறது

இந்த விமானத்தில் ஓரிருவர் மட்டுமே பயணம் செய்த போதிலும் இந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் அங்குள்ள மக்கள் படுகாயம் அடைந்து உயிர்ப்பலி ஆகி உள்ளதாகவும், இதுவரை 27 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இன்னும் பல பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுவதாகவும் அந்த பகுதியினர் தெரிவித்தனர்

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாகவும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்புப்பணி செய்ய காங்கோ நாட்டின் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது