பத்து நாட்களுக்கு விமான சேவை ரத்து! பயணிகள் கடும் அவதி!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதனால் போக்குவரத்து சேவைகள் பெரிதளவு பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அனைத்து வகுப்பிற்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினார்கள்.
அதனை தொடர்ந்து படிப்படியாக போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டது. கடந்த மாதங்களில் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மீண்டும் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் எழுச்சி பெற தொடங்கியது. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதங்களில் ஒரு சில பகுதிகளுக்கு விமான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விமான போக்குவரத்து இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் புதுச்சேரி பெங்களூரு இடையே விமான சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நிறுத்தத்திற்கு காரணம் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று முதல் 17ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.