சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்

Photo of author

By Parthipan K

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்.

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 80 விமானங்கள் இயக்கப்படுவதாக சென்னை விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.கொரோனவால் நோய் தொற்று அதிகமான அதிகமான போதிலும் ஒரே நாளில் அதிக அளவில் விமானத்தை சென்னை சர்வதேச விமான நிலையம் இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையம் தொடர்ந்து செயலில் இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 80 விமானங்கள் இயக்கப்படயுள்ளன. இதில் சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் 40 ஆகும். மீதமுள்ள 40 விமானங்கள் சென்னைக்கு பல்வேறு நகரங்கள் இருந்து வரும் விமானங்கள் ஆகும்.

பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து சென்னையில் இருந்து செயல்படும் என தகவல் தெரிவிக்கின்றனர்.