தமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா?
கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும் வரப்போகும் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டுக்கொண்டார்.நேற்று புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சீராய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் துணைநிலை ஆளுநர் கூறியதாவது, தற்போது புதுச்சேரியில் 21 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது மிகவும் வருத்தத்திற்குரியது என்றார்.
நாம் அனைவரும் வெளியே செல்லும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும்,கரீனா தொற்றால் இத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒரு ஆய்வு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கரோனா தொற்றிலிருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.கருணா தொற்று தற்பொழுது அதிகமாக பரவி வருவதால் வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மக்கள் அன்றாட வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு பொருளாதார பாதிப்புகள் ஏதும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் தற்பொழுது தளர்வுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.மேலும் பொதுமக்கள் தளர்வுகளில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தால் கொரோனா தொற்றானது அதிக அளவில் பரவும்.அதனையடுத்து மீண்டும் முழு ஊரடங்கு போட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.மேலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் வகுப்பு அதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை நடத்தவும் இந்த சீராய்வு கூட்டம் உதவிடும் என தமிழிசை தெரிவித்தார்.கடைசியாக அவர் கூறியதாவது, ஆகஸ்ட் 15 தேசியக்கொடி ஏறும்போது கரோனா தொற்று இறங்கி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.