வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி!
தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி இரவு பகல் பாராமல் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.அதுமட்டுமின்றி திமுக தான் வெற்றி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்தார்.
இவர் கூறியதைப்போலவே வாக்குச்சாவடி மையத்தில் பல குளறுபடிகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.அந்தவகையில் கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன் பல மணி நேரமாக கண்டைனர் லாரிகள் சம்மதமே இல்லாதவகையில் நின்று கொண்டிருந்தது.அது அப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பரபரப்பே ஆறாத நிலையில் அடுத்ததாக நேற்று கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகில் உள்ள அறையில் திடீரென்று கணினி மற்றும் ஏசி தானாக இயங்கியது பெரும் மர்மமாகவே உள்ளது.அப்போது திமுகவினர் இதற்கு அதிமுகவினர் தான் காரணம் என்று குற்றம்சாட்டினர்.
இதற்கு அடுத்ததாக இன்று நாகை அடுத்து தெத்தி பகுதியில் உள்ள ஓர் தனியார் கல்லூரியில் நாகை,வேதாரண்யம்.கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.அதனை ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.இன்று அதிகாலை 20 நிமிடத்திற்கு மேலாக கழுகு போல ட்ரோன் கேமரா ஒன்று வாக்கு என்னும் மையத்தை மட்டும் குறிவைத்து வட்டமடித்து வந்துள்ளது.
இது இவ்வாறு பறந்துக்கொண்டிருக்கிறது என திமுகவினர் மற்றும் அவரது கூட்டணி கட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பின் வாக்கு எண்ணும் மையத்தை கூட்டமாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதன்பின் அந்த ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சென்னையை சேர்ந்த குமார்,சுரேஷ்குமார்,பாலாஜி ஆகியோரை நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் அழைத்துசென்றுள்ளனர்.பின் அவர்களிடமிருந்த ட்ரோன் கேமரா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.அந்த ட்ரோன் கேமராவில் வாக்கு எண்ணும் மையத்தை புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரோன் கேமராவை பறக்கவிட அனுமதி அளித்த அதிகாரிகளிடமும் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் அந்த கல்வி நிறுவனம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் என அவ்வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.