பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்!
நமது வழிகளை சுலபம் ஆக்குவதற்காகவும், செல்லும் தூரம் குறையவும், அரசாங்கம் மேம்பாலங்கள் அமைத்து நமக்கு சுலபமான வழி வகை செய்துள்ளது. அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறைந்த நேரத்தில் இலக்கை அடையலாம் என்ற எண்ணத்தில் இப்படி மேம்பாலங்கள் போன்றவற்றை அரசு அமைத்து வருகிறது.
அது எல்லா மாநிலங்களிலும் அதை செயல்படுத்துகிறது ஆனால் அப்படி செயல்படுத்தும்போது அது தரமானதாக இருந்தால் பரவாயில்லை அதுவே நம் உயிரை வாங்கும் எமனாக இருந்தால் என்ன பண்ணுவது. அப்படி ஒரு விஷயம்தான் இப்போது ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் அனகாபள்ளி பகுதியில் சாலையில் பறக்கும் மேம்பாலம் கட்டுமான பணி ஒன்று தற்போது நடந்து வருகிறது. இந்த சாலை ஆனது கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென நேற்று மாலை இடிந்து விழுந்ததால் அதன் கீழே சென்று கொண்டிருந்த கார் மற்றும் லாரி அந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரவாணி தலைமையிலான போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி சரியாக எங்களுக்கு தெரியவில்லை என்றும், இது பற்றி நாங்கள் தீர விசாரித்து தெரிவிக்கின்றோம் என்றும் கூறினார்.
மேலும் இதுபற்றி நாங்கள் இதுவரை ஐந்து பேரை மீட்டு காப்பாற்றி உள்ளோம். அவர்கள் எங்களிடம் 2 பேர் சிக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்கிறது என கூறியுள்ளார். எனினும் இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் எனபது தெரிகிறது. இந்த இழப்புக்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா? என்பது பலரது கேள்வியாக உள்ளது. தரமான பொருட்களை வைத்து கட்டும் பொழுது இந்த மாதிரி விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் என்பதே அனைவரின் கருத்துக்கள்.