நீர் மாசுபாட்டால் எழும்பிய நுரை! நிலைகுலைந்த கிராமம்- நேர்ந்தது என்ன?

Photo of author

By Parthipan K

இயற்கை மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது மனித இனம் என்று இயற்கை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சீற்றத்தின் மூலமாக மனிதர்களுக்கு உணர்த்தி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது, அயர்லாந்து நாட்டில் கடல் நுரை சிறிது நாட்களாக புன்மஹன் என்னுமிடத்தில் ஏற்பட்டு வருகிறது.

இதனால் அங்கு வாழும் மக்கள் இயல்பு நிலையை இழந்து தவிக்கின்றனர். கடலில் இருந்து எழும்பும் நுரைகள் கரையோரமாக உள்ள குடியிருப்பு இடம்வரை சென்று இயல்பு நிலையை பாதித்து உள்ளது. இதனால் சாலையில் சாதாரணமாக மக்களால் நடமாட முடியவில்லை. தினசரி வேலைப்பாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கடல் நுரை சீற்றத்தால் பெருமளவில் தாக்கப்பட்டுள்ளது.கருப்பு நிற சாலைகள் அனைத்தும் வெண்மை நிறமாக தோற்றமளிக்கிறது ,இந்த நுரை மூட்டத்தால்.

பாஸ்பேட் என்ற கரிமப்பொருள் கடலில் கலப்பதால் இந்த நுரை ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடல்நீர் மாசுபாட்டால் அயர்லாந்து நாட்டு மக்கள் அமைதி இழந்து உள்ளனர்.