கேப்டன் பதவிக்கு ஆசைப்படாமல் உங்களுடைய கவனத்தை பந்துவீச்சில் முழு கவனத்தையும் செலுத்துங்கள் என்று நம்பர் ஒன் பவுலரான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் பாசித் அலி அவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
அதாவது தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா அவர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் அதிகம் காயம் அடைவதாக கூறிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்கள் சூர்யக்குமார் யாதவ் அவர்களை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அவர்கள் “இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக இருப்பது போல இந்திய அணிக்கும் வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக நியமிக்கப் பட வேண்டும்” கூறியிருந்தார். இந்நிலையில் பும்ரா அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி அவர்கள் அறிவுரை வழங்கி இருக்கின்றார்.
பும்ரா அவர்களுக்கு பாசித் அலி அவர்கள் “இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா அவர்கள் கூறுவதை கேட்டால் பாபர் அசம் அவர்களுக்கு கேப்டன் பதவி மீது இருக்கும் ஆசை போல பும்ரா அவர்களுக்கும் கேப்டன் பதவி மீது ஆசை இருப்பதாக தெரிகின்றது.
பும்ரா அவர்கள் இப்படி கேப்டன் பதவி மீது ஆசை வைத்து அலையக்கூடாது. உலக அளவில் முன்னணி பந்துவீச்சாளராக நம்பர் 1 பந்து வீச்சாளராக பும்ரா அவர்கள் திகழ்ந்து வருகின்றார். பும்ரா அவர்கள் அவருடைய பந்து வீச்சில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும்.
பும்ரா அவர்கள் கபில்தேவ் மற்றும் இம்ரான் கான் குறித்து பேசியுள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே அதாவது கபில்தேவ் மற்றும் இம்ரான் கான் இருவரும் ஆல்ரவுண்டர்கள் என்பதை ஜஸ்பிரித் பும்ரா மறக்கக் கூடாது.
கபில் தேவ் மற்றும் இம்ரான் கான் அவர்கள் இருவரும் சிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கினார்கள். அதனால் தான் கபில்தேவ் மற்றும் இம்ரான் கான் இருவரும் கேப்டன் பதவியில் ஜொலித்தனர். மேலும் கபில்தேவ் மற்றும் இம்ரான் கான் இருவரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்ட பின்னர் அணிகளுக்குள் இடம்பெறவில்லை என்பதையும் பும்ரா அவர்கள் மறக்கக் கூடாது.
இம்ரான் கான் மற்றும் கபில்தேவ் இருவரும் சாதாரணமான பந்துவீச்சாளர்களாக இருந்து பின்னர் ஆல்ரவுண்டர்களாக மாறினர். அதன் பின்னரே அவர்கள் கேப்டன்களாக மாறி தங்களுடைய திறமைகளை காட்டினர்.
ஒரு பந்துவீச்சாளருக்கும் ஆல்ரவுண்டருக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் குறித்து பும்ரா அவர்கள் பேசியது குறித்தும் அறிந்தேன். பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த கேப்டனாகவும் தொடர்ந்து அதி வேகமாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளராகவும் அவர் விளங்குகிறார்.
இவ்வாறு இருப்பவர்களால் சிறந்த பயிற்சியாளராகவும் இருக்க முடியும். சாம்பியன் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் புதிய கேப்டனாக வரலாம். அதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே பும்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.