மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் பகவான் கிருஷ்ணர் அவதாரமாகும்.சிவனை வழிபடுபவர்கள் இந்நாளை கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை வழிபடுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் அழைக்கிறார்கள்.
பிருந்தாவனம்,மதுரா,துவாரகா,குருவாயூர்,கோகுலம்,உடுப்பி உள்ளிட்ட இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.தேய்பிறை அஷ்டமி,ரோகிணி நட்சத்திரம்,ரிஷப லக்கனம் ஆகிய மூன்றும் சேர்ந்து வரும் நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம்.கேசவன்,கோபாலன்,கோவிந்தன் ஆகிய பெயர்களை கொண்ட கிருஷ்ணரை தமிழகத்தில் கண்ணன் என்று அழைக்கிறீர்கள்.இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் சீடை,அவல்,வெண்ணெய்,தோயம்,நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக படைப்பது வழக்கம்.
இந்த நாளில் குழந்தையின் பாதசுவடுகளை வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்குள் வருவது போல் வரைய வேண்டும்.இப்படி செய்வதால் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வருவார் என்பது ஐதீகம்.இந்த நன்னாளில் அன்னதானம் செய்தால் கோடி புண்ணியம் உண்டாகும்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள்:
பெண்களுக்கு திருமணத் தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும்.கிருஷ்ணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.பணத் தடை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வழிபிறக்கும்.நிர்வாக திறமை அதிகரிக்க கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
கிருஷ்ணருக்கு உகந்த நெய்வேத்தியத்தை படைத்து வழிபட்டால் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.எனவே நாளை(ஆகஸ்ட் 26) அன்று கிருஷ்ணரை வழிபட்டு அவரின் அருளை பெறுங்கள்.