மக்களே இந்த ஆவணம் இருந்தால் தான் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 கிடைக்கும்!! செக் பண்ணிக்கோங்க!!
கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தால் பல ஏழை குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். இதன் மூலம் புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய பயனர்கள் பயனடைவார்கள். மேலும் இந்த மாதமே அதற்கான பணிகள் நடைபெறுவதால் அதற்க்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்குமாறு அரசு அறிவித்துள்ளது.
முதலில் இந்த திட்டம் புதிய பயனர்கள் யாருக்கெல்லாம் விரிவுபடுத்தப்படும் என்று பார்க்கலாம்.
1.புதிதாக குடும்ப அட்டை பெற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
2.முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிமார்களுக்கு வழங்கப்படும்.
3.முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிமார்களுக்கு வழங்கப்படும்.
4.மேலும் புதிதாக திருமணம் ஆன குடும்ப பெண்களுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.
1.குடும்ப தலைவியின் பெயர் உள்ள வங்கி கணக்கு நகல்.
2.மேலும் அந்த வங்கியில் இணைக்கப்பட்ட ஆதார் அட்டையில் கும்ப தலைவியின் அலைபேசி எண்ணெய் இணைக்க வேண்டும்.
3.புதிதாக வாங்கப்பட்ட குடும்ப அட்டை.
4.திருமண சான்றிதல்.